Published on 11/12/2019 | Edited on 12/12/2019
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, உத்தர பிரதேசத்தில் லோக் பவனில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது 25 அடி உயர பிரமாண்ட வெண்கல சிலையை ஜெய்ப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பக் கலைஞரான ராஜ்குமார் பண்டிட்டின் வடிவமைத்துள்ளார்.

இந்த சிலையை வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு சிலையை உருவாக்க ரூ. 90 லட்சம் செலவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.