Published on 11/01/2022 | Edited on 11/01/2022

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜகவுக்கு பின்னடைவாக, அக்கட்சியை சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னனதாக பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் ஆகியோரை புறக்கணிக்கும் உத்தரப்பிரதேச அரசின் அணுகுமுறையால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக சுவாமி பிரசாத் மௌரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.