Published on 01/11/2019 | Edited on 01/11/2019
தீபாவளி கடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும் டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையிலேயே நீடிப்பதால் அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தீபாவளி, வாகனங்கள், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து விவசாயக் கழிவுகளை எரிப்பதால் உண்டாகும் புகை என டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி காற்றில் மாசின் அளவு 582 புள்ளிகளாக உயர்ந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு வரும் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.