Published on 24/09/2022 | Edited on 24/09/2022

உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட புல்கித் ஆர்யா என்ற நபருக்கு சொந்தமான ரிசார்ட் இடிக்கப்பட்டது.
உத்தரகாண்டின் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இக்கொலை சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கித் ஆர்யா என்ற நபருக்கு சொந்தமான அந்த ரிசார்ட் இடித்து நொறுக்கப்பட்டது.