பாட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பாட்டா நிறுவனம் 1894 முதல் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காலணி சந்தையில் உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பாட்டாவில், இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா சர்வதேச தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வந்த அலெக்சிஸ் நசார்ட் பதவி விலகும் சூழலில், சந்தீப் கட்டாரியா தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வோடஃபோனின் இந்தியா மற்றும் ஐரோப்பியப் பிரிவிலும், யூனிலீவர், யூம் பிராண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் 24 ஆண்டுகள் பணியாற்றிய சந்தீப் கட்டாரியா கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாவின் இந்திய பிரிவுக்குத் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், தற்போது அவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டா நிறுவனத்தின் 126 ஆண்டுகால பயணத்தில் இந்தியர் ஒருவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுத்து இதுவே முதன்முறை ஆகும்.