ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூபாய் 1,803.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
பஞ்சாயத்து ராஜ் அமைச்சக பரிந்துரையின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 7,314.00 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 4,370.25 கோடியும், பீஹார் மாநிலத்திற்கு ரூபாய் 3,763.50 கோடியும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூபாய் 3,309.00 கோடியும், ஆந்திர மாநிலத்திற்கு ரூபாய் 3,137.03 கோடியும் விடுவித்துள்ளது.. குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ரூபாய் 31.50 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 46.50 கோடியும், நாகலாந்து மாநிலத்திற்கு 62.50 கோடியும், மேகாலயா மாநிலத்திற்கு 91.00 கோடியும் மத்திய அரசு விடுத்துள்ளது.
குறிப்பாக தமிழகத்திற்கு 1,803.50 கோடி மானியத் தொகையை அரசு விடுத்துள்ளது. 28 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடிப்படை மானியங்களாவும், இணைப்பு மானியங்களாகவும் மொத்தம் ரூபாய் 45,737.99 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.