Published on 11/10/2022 | Edited on 11/10/2022

உக்ரைன் விவகாரம் குறித்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்ர ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அத்ற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐநா பொதுச்சபையில் இவ்வார இறுதியில் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யா வலியுறுத்தியதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 107 உறுப்பு நாடுகள் வெளிப்படையான முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வாக்களித்தன.
13 நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 39 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தது. ஐநாவில் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடை இந்தியா எடுத்தது முக்கியமான நிலைப்பாடாக கருதப்படுகிறது.