Published on 24/09/2020 | Edited on 24/09/2020
டெல்லியில் இன்று மத்திய அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்-ஐ, தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
அப்போது, சேலம், உடுமலை, தேனி ஆகிய பகுதிகளில், புதிதாக துவங்கப்பட்ட கால்நடை பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் கூடுதல் நிதி மற்றும் புதிய திட்டங்களுக்கு சுமார் 1,140 கோடி வேண்டி, மத்திய அமைச்சரிடம் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில், தமிழக அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் கோபால், கால்நடை பல்கலை துணைவேந்தர் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்