Skip to main content

வானில் மோதிக்கொள்ள இருந்த இரு இந்திய விமானங்கள்...

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
ஃப்லிக்


சென்னையிலிருந்து கவுகாதி நோக்கி இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதேபோல கவுகாதியிலிருந்து கொல்கத்தா நோக்கி மற்றொரு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொல்கத்தா சென்றுகொண்டிருந்த விமானம் வங்காளதேச வான்வெளியில் 36,000 அடியில் பறந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து கவுகாத்தி சென்றுகொண்டிருந்த விமானம் 35,000 அடியில் பறந்தது. கொல்கத்தா சென்றுகொண்டிருந்த விமானத்திற்கு வங்காளதேச வான்போக்குவரத்து 35,000 அடியில் பறக்க கேட்டுக்கொண்டது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த விமானம் 36,000 அடியிலிருந்து 35,000 அடிக்கு இறங்கியது.  இந்த இரண்டு விமானங்களும் ஒரே திசையில் ஒரே அடியில் மோதிக்கொள்ளும் நிலையில் பறந்தது. இந்நிலையில் இதனை கவனித்த கொல்கத்தா வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானம் வலதுபுறம் திரும்பி செல்ல உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் திரும்பியதால் இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரு விமானங்களும் மோதுவதற்கு 45 வினாடிகள் இருந்த சூழ்நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்