9 வயது சிறுமிக்கு தொந்தரவு;
65 வயது முதியவர் கைது
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மடுவப்பேட்டையை சேர்ந்த கலியமூர்த்தி வயது (65) கொத்தனார் வேலை செய்து வருபவர். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனலட்சுமி வயது(9) என்ற பெண்ணிடம் நேற்று மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக அருகில் உள்ள பொது மக்கள் அவரை அடித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கலியமூர்த்தியை போலீசார் பரிசோதனை செய்ய மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பாலியல் தொந்தரவில் கைது செய்யப்பட்ட கலியமூர்த்திக்கு 2 பெண்கள் மற்றும் பேத்திக்கு திருமணம் ஆகி கொள்ளு பேத்தி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுந்தரபாண்டியன்