பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஷ்வ பிரசாத் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இருந்து இதுவரை டைட்டில் அறிவிப்பு, மோஷன் போஸ்டர், க்ளிம்ப்ஸ் ஆகியவற்றை வெளியாகியுள்ளது. மேலும் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோ வெளியாகியிருந்தது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் இருந்து மாளவிகா மோகனன் நடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் சண்டைக் காட்சியில் அவர் நடிக்கிறார். அது படமாக்கப்பட்ட போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.