பா.ஜ.க. தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில், திரிபுரா மாநில முதல்வர் அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறினார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம். தலைமையிலான அரசு ஆட்சி செய்துவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாணிக் சர்க்கார். இந்தியாவின் ஏழை முதல்வர் என்று அழைக்கப்பட்ட இவரது ஆட்சி, நடந்துமுடிந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலின் மூலம் தோல்வி மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், திரிபுரா மாநில அரசு வழங்கும் குடியிருப்பில் இருந்து மாணிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா ஆகியோர் வெளியேறினர். இவர்களுக்கு குழந்தை கிடையாது. ‘அவர்கள் இருவரும் தங்குவதற்கு திரிபுரா மாநில கட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது’ என திரிபுரா சி.பி.எம். மாநில செயலாளர் பிஜன் தர் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலத்தில் சமைக்கப்படும் உணவை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். சில புத்தகங்கள், துணிகள் மற்றும் சி.டி.க்களை மாணிக் சர்க்கார் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார். தற்போதைய அரசு வீடு ஒதுக்கித்தந்தால் அங்கு இடம்மாறிக் கொள்வார்’ என கட்சி அலுவலக செயலாளர் ஹரிபடா தாஸ் கூறியுள்ளார்.