ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது, செப்டம்பர் 3–ந் தேதி நடைபெற உள்ள தனது மகளின் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கினார். மேலும் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்தும் கலந்து ஆலோசித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.