Skip to main content

பிறந்த குழந்தைக்கு மூன்று அப்பா...! -அதிர்ச்சி... ஆச்சரியம்.. விசித்திரம்...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

இனிமேல் இந்த சமூக சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கும் அதை பார்த்து ஐயோ அப்படியா என ஆச்சரியப்படத்தான் நம்மால் முடியும் அப்படித்தான் இந்த வினோத சம்பவமும் அரங்கேறியுள்ளது. ஆம்,காணாமல் போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டால் இது என்னுடையது என இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடிய நிகழ்வுகள் நடந்துள்ளது ஆனால் பிறந்த குழந்தைக்கு இரண்டல்ல மூன்று தந்தை இருக்க முடியுமா? ஏன் இருக்க முடியாது நம்ம கொல்கத்தாவில் நடந்திருக்கே என இணையதள நண்பர் ஒருவர் அந்த அதிர்ச்சி விவகாரத்தை விவரித்தார். 

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நிறைமாத கர்பினியான சப்னா மைத்ரா என்ற அந்த பெண்ணை  அவரது கணவரான  தீபன்கர்பால் என்பவர் அழைத்து வந்து மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அப் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று நேற்று காலை பிறந்தது. அது சுகப்பிரசவம்தான், குழந்தையை கொஞ்சினார்கள் கணவனும் மனைவியும். அடுத்து அப்பெண் பிறந்த குழந்தையை மற்றவர்களிடம் பகிர செய்த காரியம் தான் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனை கிளம்பியது. 

child


பிறந்த அந்த குழந்தையை புகைப்படம் எடுத்து இந்தமருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என தனது செல்போன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். சிறிது நேரத்தில் அவரின் செல்போனை சுவிச் ஆப் செய்து விட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு மூச்சிரைக்க ஓடி வந்தார் ஒரு நபர் அவர் பெயர்  ஹர்ஷா கேத்ரி. அந்த மருத்துவமனை செவிலியர்களிடம் சென்று ஏம்மா நான் இப்போது குழந்தை பெற்ற  சப்னாவின் கணவர்.பிறந்த என் குழந்தையும் என் மனைவியும் எந்த அறையில் இருக்கிறார்கள் என கேட்க அந்த செவிலியர்களுக்கு அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டது. 

 

child


இதனால் குழந்தை பிறந்த அந்த அறைக்குள் அந்த மனிதரை விடவில்லை. மருத்துவமனை பாதுகாவலரை அழைத்து இந்த நபரை எங்கும் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆபரேசன் தியேட்டர் போய் விட்டு வருகிறேன் என கூறி விட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கூற சென்று விட்டார். பிறகு அந்த செவிலியர் திரும்ப வந்து குழந்தையின் தந்தை என்று கூறிய ஹர்ஷா கேத்ரி யிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக ஓடி வந்த மற்றொரு நபர் "எங்கே, எந்த ரூம்." என செவிலியரிடம் கேட்க பதிலிக்கு செவிலியர் யார் நீங்க என்ன வேனும் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த நபர் என் பெயர் பிரதீப் ராய். குழந்தை பெற்றெடுத்த சப்னா மைத்ராவின் கணவன். பிறந்தது என் குழந்தை, என் மனைவியும் குழந்தையும் எங்கே கூறுங்கள் என கூற தூக்கி வாரிப் போட்டது மருத்துவமனை ஊழியர்களுக்கு.

அந்தப் பெண் சப்னாவின் கணவர் என்று முதலில் தீபன்கர்பால் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குழந்தை பேறுக்கு பிறகு மற்றொருவரான  ஹர்ஷா கேத்ரி, என்பவர் வந்து சப்னா என் மனைவி பிறந்தது என் குழந்தை என கூறி அமர்ந்திருக்கிறார். இப்போது மூன்றாவது ஒருவரான பிரதீப் ராய் என்பவர் எனது மனைவி பிறந்தது எனது வாரிசு என சொந்தம் கொண்டாடி இங்கு வந்திருக்கிறார் என்னடா கொடுமையா இருக்கே என குழம்பிப்போன மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்தப் பெண்ணிடம் போய் பேசியுள்ளளனர் ஆனால் அப்பெண் எந்த தகவலுமே கூற வில்லை. வேறு வழி இல்லாமல் அங்குள்ள நடாஜிநகர் காவல் நிலையத்திற்கு  தொடர்பு கொண்டு இந்த விபரங்களை கூறியுள்ளார்கள். செய்தி கேட்ட போலீசாரும் அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு வந்து ஒரு மனைவி மூன்று கணவர்கள் என ஒவ்வொருவரையும் மாறி மாறி விசாரித்தும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. மூன்று ஆண்களும் சப்னா என்னோட மனைவி பிறந்தது என் ரத்தம் என் வாரிசு என அந்த குழந்தைக்கு அப்பா நான் என்று மூவரும் ஒரே கருத்தை தொடர்ந்து கூறியிருக்கிறார்கள். 

child


இந்த சம்பவங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சப்னா என்ற அந்த குழந்தையின் அம்மாவோ உண்மையான அப்பா யார்? யார் உண்மையான கணவர் இப்படி எதைப்பற்றியும் மூச்சு விடாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். போலீசார் எவ்வளவோ விசாரித்தும் ஒரு தகவலையும் அவர் கூறவில்லை. வேறு வழி அந்தப் பெண்  வாய் திறந்து இவர்தான் என்று சொன்னால் மட்டுமே பெண் குழந்தைக்கு தந்தை  யார் என்று தெரியவரும். இதனால் குழம்பிப் போன போலீசார் ஓரிரு நாட்கள் கழித்து சட்டப்படி பிரச்சனைக்கு தீர்வு காண்போம் அதுவரை தாயும், சேயையும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். மூன்று கணவர்கள் அதாவது, குழந்தையின் மூன்று அப்பாக்களிடமும் எந்தப் பிரச்சனையும் செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிக் கொன்டு கூப்பிடும் போது வாருங்கள் என மூவரையும் மருத்துவமனையை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். 

ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் அவருக்கும் தெரியாமல் இன்னொருவர் என வாழ்க்கை எங்கெங்கோ போகிறது.

 

சார்ந்த செய்திகள்