கற்பழிப்பு சாமியார் தப்ப உதவிய மூவர் கைது!
ஹரியானாவைச் சேர்ந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்து கடத்தி தப்பிக்கச் செய்வதற்கு முயன்ற 3 பேரை ஹரியானா போலீஸ் கைது செய்துள்ளது.
கற்பழிப்புக் குற்றத்தில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம் ரஹீம் ரோடக் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஹெலிகாப்டரில் ரோடக் கொண்டு செல்ல போலீஸார் திட்டமிட்டனர். அப்போது, குர்மீத் சாமியாரை போலீஸாரிடமிருந்து விடுவித்து தப்புவிக்க அவருடைய பாதுகாவலர்கள் முயன்றார்கள்.
நீதிமன்றத்தை சுற்றி பயங்கர வன்முறையை தூண்டிவிட்ட குர்மீத்தின் ஆதரவாளர்கள் 35 பேரை கொன்றனர். 250க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தினூடே, குர்மீத்தை ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்ல போலீஸார் முயன்றனர். அப்போது அவர்களை வழிமறித்து சாமியாரை விடுவித்து கடத்த சம்கவுர் சிங், கரம்ஜித் சிங், டான் சிங் ஆகிய மூவர் முயற்சித்தார்கள். இவர்களில் சம்கவுர் சிங் டேரா சச்சா சவ்தா ஆசிரமத்தின் பொறுப்பாளராக பணியாற்றியவர். கரம்ஜித் சிங் பஞ்சாப் போலீஸில் கமாண்டோவாக பணியாற்றுபவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.