நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையத்திற்கு மாணவர்கள் என்னென்ன பொருட்கள் கொண்டுசெல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா பாதிப்பு குறையாததையடுத்து செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15,97,433 பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுதவுள்ளனர். பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ள இந்த தேர்வை எழுத மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில், விண்ணப்பப்படிவத்தில் ஒட்டப்பட்ட Passport Size புகைப்படம், முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை எடுத்துவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.