இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பான விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கையை தற்போது சிபிஐ தாக்கல் செய்துள்ளது. கைதானவர்களில் 13 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க மேம்பட்ட தடயவியல் நுட்பங்கள்பயன்படுத்தப்பட்டன. ஏ.ஐ தொழில்நுட்பம், சிசிடிவி காட்சி, டவர் இருப்பிட பகுப்பாய்வு போன்றவை பயன்படுத்தப்பட்டது. நீட் வினாத்தாள் வழக்கில் 40 பேரை கைது செய்துள்ளோம். 58 இடங்களில் சோதனை நடத்தியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை தொடர்ந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை முடிந்ததும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.