Skip to main content

நிலத்தகராறு : பெண்ணை எட்டி உதைத்த ஆளுங்கட்சி தலைவர் கைது!

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண்ணை எட்டி உதைத்த ஆளுங்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

telungana

 

 

 

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மண்டல தலைவராக இருப்பவர் இம்மாடி கோபி. இவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலத்தை ரூ.33 லட்சத்திற்கு பெண் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், இம்மாடி கோபி நிலத்தை வாங்கியதற்கான பத்திரத்தை அந்தப் பெண்ணிடம் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
 

 

 

இந்நிலையில், இன்று காலை தான் வாங்கிய நிலத்திற்கான பத்திரத்தை வழங்குமாறு, தனது உறவினர்களுடன் சேர்ந்து இம்மாடி கோபியிடம் அந்தப் பெண் முறையிட்டுள்ளார். அப்போது, கூடுதல் பணம் வழங்குமாறு வலியுறுத்திய இம்மாடி கோபி, அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது காலணியால் இம்மாடி கோபியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, இம்மாடி கோபி அந்தப் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்து விரட்டியுள்ளார். 
 

இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் சென்றிருந்தவர்கள் இம்மாடி கோபிக்கு சொந்தமான பகுதியை சூறையாடினர். இந்த விவகாரத்தில் பெண்ணைத் தாக்கிய வழக்கில் இம்மாடி கோபி மீதும், பொருட்சேதம் ஏற்படுத்திய பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பிச் சென்ற பா.ஜ.க பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The incident that happened to a trusted BJP administrator in telungana

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(36). தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப்குடா பகுதியில் ராமு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிணமாகக் கிடந்த ராமுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்கு இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பேரில், அந்த செல்போன் எண்ணைக் கொண்டு, அந்த பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யூசப்குடா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, இரவு நேரத்தில் ராமு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்த பெண் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் ராமுவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகரும் தொழிலதிபருமான ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமுவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

காங்கிரஸில் இணைந்தார் ஓய்.எஸ்.ஷர்மிளா

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Y. S. Sarmila joined the Congress!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 

அதே நேரம், இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.  இந்த நிலையில், ஆந்திர மாநில முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சரும், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஓய்.எஸ்.ஷர்மிளா. இவர் ஓய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில், ஓய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.