தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியும் அவரது மகன் பத்ரா ரெட்டியும் சியாமளாதவி என்பவர் அளித்த நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அவர்கள் இருவர் மீது, மேலும் ஐ.பி.சி 447, 506 பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது.
தெலுங்கானாவின் டுன்டிகால் காவல்நிலையத்தில், சியாமளாதேவி அவருக்குச் சொந்தமான 20 குழி நிலத்தை, அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் அபகரித்துவிட்டதாகப் புகார் செய்தார். இவரது நிலம் இரு மருத்துவமனைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைகள் அமைச்சருக்குச் சொந்தமானது. சியாமளாதேவியை, அமைச்சர் நிலத்தை விற்க வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே, அமைச்சர் தரப்பு, நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பிய நிலையில், சியாமளாதேவி காவல்நிலையத்தை நாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.