இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் சஹிபாபாத் பகுதியில் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண் பைக்கில் வந்த 2 பேருடன் பேசிக்கொண்ருந்தார். திடீரென பேசிக்கொண்டிருந்த அந்த நபர்கள் தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணை சரமாறியாக சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அந்த இளம்பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த இளம்பெண்ணின் உறவினர்களை தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்து வருவதாக ஏ.எஸ்.பி தெரிவித்துள்ளார்.