
பத்து நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் காலணியால் தாக்கிய காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். தினம்தோறும் வருகைப் பதிவேட்டில் குறிக்கும் பொழுது சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் தலைமை ஆசிரியர் முயற்று நடந்து கொள்வதாக பெண் ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வழக்கம்போல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த ஆசிரியையிடம் கால தாமதமாக வந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், அவரை காலணியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.