Skip to main content

மக்களுக்கு உதவ 500 கோடி ரூபாய் - டாடா அறிவிப்பு...

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனாவால் இந்தியா முழுவதும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் டாடா குழும அறக்கட்டளை 500 கோடி ரூபாய் வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். 

 

Tata Trusts commits Rs 500 crore to help COVID-19 treatment

 

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் இந்தியாவில் 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சூழலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பதித்துள்ள இந்த சூழலில், மக்களுக்கு உதவும் வகையில் டாடா குழுமம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளைச் செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்தன் டாடா, "COVID 19 நெருக்கடி என்பது மனித இனமாக நாம் எதிர்கொள்ளும் கடினமான சவால்களில் ஒன்றாகும். டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவ முன்னின்றுள்ளது. கடந்த காலத்தை விட தற்போது உள்ள நிலை மிகமுக்கியமானது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில், "டாடா குழும அறக்கட்டளை கரோனாவுக்காக ஒதுக்கியுள்ள ரூ .500 கோடி, 

- மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும்,

- அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சுவாச கருவிகள் வாங்கவும், 

- தனிநபர் சோதனையை அதிகரிக்கும் வகையில் சோதனைக் கருவிகளை வாங்கவும், 

- பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், 

- சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் அறிவு மேலாண்மை மற்றும் பயிற்சிக்காகவும் செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்