
மளிகைப் பொருட்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தையும் பெறும் வகையில் டாடா குழுமம் 'டாடா நியு' (Tata Neu) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மளிகைப் பொருட்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தையும் ஒரே செயலியில் பெறும் வகையில் டாடா குழுமம் 'டாடா நியு' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்தின் புதிய நிறுவனமான டாடா டிஜிட்டல் 'டாடா நியு' என்ற செயலியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, டாடாவின் அனைத்து பிராண்டுகளும் ஒரே செயலியில் ஒருங்கிணைப்பட்டுள்ளன.
பிக்பேஸ்கெட், குரோமா, டாடா கிளிக், டாடா பிளே உள்ளிட்டவை டாடா நியு செயலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, டைட்டன், தனீஷ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவையும் இந்த செயலியின் கீழ் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மளிகைப் பொருட்கள், விமான டிக்கெட்டுகள் என டாடாவின் அனைத்து பிராண்டுகளையும் ஒரே செயலியில் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடாவின் இந்த புதிய செயலி அமேசான், பிளிப்கார்டுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.