புதுச்சேரியில் இன்று (24/07/2022) செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனக் கூறியதற்கு என்னை விமர்சனம் செய்துள்ளார்கள். எனது பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. தாய்மொழி, தாய்மொழி எனக் கூறுவோரின் குழந்தைகள் கூட தாய்மொழியில் கல்வி கற்பதில்லை. சமூகநீதி என்று பேசிக் கொண்டிருக்கும் சிலர் கூட திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆளுநர்கள் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோம்; அதை மற்றவர்கள் அரசியலாக்கினால் நான் பொறுப்பல்ல. பட்டமளிப்பு விழாக்களையே அரசியலாக்கினால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்? மாணவர்களிடம் நல்லதை விதைக்க வேண்டும் என்பதே எனது கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.