Skip to main content

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
Supreme Court's YouTube page hacked

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்திற்கு சுமார் 2.17 லட்சம் சந்தாதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த யூடியூப் பக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இச்சேவைக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் உச்சநீதிமன்றத்தின் யூ டியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று (20.09.2024) ஹேக் செய்துள்ளனர். மேலும் ‘ரிப்பிள்’ என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூ டியூப் பக்கத்தைப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Supreme Court's YouTube page hacked

உச்சநீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தில் இருந்த முக்கிய காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்