Skip to main content

நோட்டாவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published on 04/08/2017 | Edited on 04/08/2017

 நோட்டாவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் உள்ள மூன்று இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா  இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை அறிமுகம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத் காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

 காங்கிரசார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்