ஜாதிவெறி வன்முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட் வேண்டும். ஜாமீனில் வெளிவர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தி இன்னொருவரை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்த முடியும் என்பதால் இச்சட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை இந்த சட்டத்தில் இருந்து நீக்கியதுடன், இந்த வழக்கிற்கு முன்ஜாமின் வழங்கலாம் என்று கடந்த 2018 மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுபெற்றநிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. எதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டதிருத்தம் 2018 அரசியலமைப்பு படி செல்லும்" என்று கூறியுள்ளது.