கடந்த 2014ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிராக அமலுக்கு வந்தது இந்த லோக் ஆயுக்தா. ஆனால், இந்த சட்டத்தை தமிழகம் செயல்படுத்தாமலே இருந்தது. லோக் ஆயுக்தாவால் எந்த ஒரு தனி நபரும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும். 15 மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்தபட்ட போதிலும், தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டும் இந்த சட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தது தமிழக அரசு. இன்று இது தொடர்பாண விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பை சரமாறியான கேள்விகள் நீதிபதிகளால் கேட்கப்பட்டது. பின்னர், மதியம் இரண்டு மணிக்கு நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் லோக் ஆயுக்தாவை செயல்படுத்த அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இதனையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் செயல்படுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கியது. மேலும் தமிழக அரசு, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. பிரசாத் பூஷன் தொடர்ந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு.