Published on 13/05/2021 | Edited on 13/05/2021

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து நீட் முதுநிலை தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், யூ.பி.எஸ்.சி நடத்தும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு, ஜூன் 27ஆம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர்கள், கரோனா இரண்டாவது அலையைக் கருத்தில்கொண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை யூ.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.