அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்னும் ஒருமாத காலத்தில் வாதங்களை அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகளை வலியுறுத்தியுள்ளார்.
வாதங்கள், ஆதாரங்கள் சமர்ப்பித்தல் என அனைத்து பணிகளும் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் அதே நேரத்தில் மத்யஸ்த குழுவும் தனது முயற்சிகளை தொடரலாம் என தெரிவித்துள்ளார். ஒருவேளை மத்யஸ்த குழு மூலமாக தீர்வு காணப்பட்டால், அது தொடர்பான அறிக்கையையும் அவர்கள் விரைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம், வரும் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், அதற்குள்ளாக தீர்ப்பினை அளிக்கும் நோக்கில், இத்தகைய அறிவுறுத்தல்களை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.