
அவ்வப்போது ரயில் நிலையங்களில் அவசர அவசரமாக ரயில்களில் ஏற முற்படுபவர்கள் தவறி விழுவதும் அங்கிருக்கும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் அவர்களை நொடிப்பொழுதில் காப்பாற்றுவதும் போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் ஆந்திராவில் ரயிலில் இருந்து இறங்கும் போது மாணவி ஒருவர் பிளாட்பாரத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையே உள்ள பகுதியில் தவறி விழுந்த நிலையில், ரயில்வே போலீசார் அந்த மாணவியை போராடி மீட்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
குண்டூரில் பயணிகள் ரயிலில் சென்ற மாணவி ஒருவர் விசாகப்பட்டினத்தில் துவாடா ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்பொழுது தெரியாமல் கால் இடறி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து போலீசார் கொடுத்த தகவலை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவி மீட்கப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.