மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், 34வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. விவசாயிகள் பெருமளவில் டெல்லி எல்லைப்பகுதிகளில் முகாமிட்டு, போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியின் சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு இலவச வை-ஃபை வழங்க, டெல்லி மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, "விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் வண்ணம் அவர்களுக்கு, வை-ஃபை வழங்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கட்சியும் முடிவெடுத்துள்ளது. நாங்கள் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டை நிறுவ சில இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தேவைப்பட்டால், வை-ஃபை ஹாட்ஸ்பாட் மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, விவசாயச் சட்டங்களுக்கு எதிராகவும் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.