Skip to main content

புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி 
பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை



புதுச்சேரி பாப்ஸ்கோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க கோரியும் பாப்ஸ்கோ இயக்குனர் அலுவலகம் முன்பும், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் அலுவலகம் முன்பும் முற்றுகையிட்டனர். இதில் 300-கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்