இந்தியாவில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆந்திராவில் அமைந்த்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள இஸ்ரோ ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிக்கோட்டா செல்லும் முக்கைய சாலைகள் மற்றும் கடற்கரை கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலோர காவல் படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.