Skip to main content

சமூக வலைத்தளங்கள் மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Sonia Gandhi blames social media!

 

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

 

மக்களவையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும். பிரபல பத்திரிகையில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி ஃபேஸ்புக் நிறுவனம், பிற கட்சிகளை விட ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் விளம்பரங்களில் சலுகை அளித்துள்ளது. இது ஃபேஸ்புக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள், அரசுடன் முறையற்றத் தொடர்பைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. ஃபேஸ்புக் மூலம் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரம் செய்தது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது.

 

அரசு அமைப்புகளின் உதவியுடன் விதிகளை மீறி ஃபேஸ்புக் மூலம் பா.ஜ.க. பிரச்சாரம் செய்துள்ளது. சர்வதேச சமூக வலைத்தளங்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான இடத்தை வழங்குவதில்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான விளம்பரங்களின் மூலம் இளைஞர்களிடையே வெறுப்புணர்வுத் தூண்டப்படுவதாகவும், அதன் மூலம் சமூக அமைதி கெடுகிறது. எனவே, நமது தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் வகையில், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.     

 

சார்ந்த செய்திகள்