Skip to main content

ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: 
கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம்

சசிகலா, இளவரசி ஆகியோரை பெங்களூருவில் ஷாப்பிங் மாலில் பார்த்தேன் என்று கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 

பெங்களூரு எம்.ஜி  சாலையில் உள்ள ஷாப்பிங் மாலில் உணவு சாப்பிட நான் எனது நண்பருடன் சென்றிருந்தேன். அப்போது போலீஸ் வாகனத்தில் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஷாப்பிங் மாலில் நுழைந்தனர். அதைப்பார்த்த எனது நண்பர், ஒருவரை காண்பித்து அவர் பார்ப்பதற்கு சசிகலா போன்று இருக்கிறார் என்று கூறினார். 

அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் எப்படி இங்கு வர முடியும் என்று மறுத்தேன். ஆனால் என்னை வலுக்கட்டாயமாக அவர்கள் பக்கம் திரும்பி பார்க்கும்படி கூறினார். நான் பார்த்தபோது அவர்கள் சசிகலா, இளவரசி என்று தெரிந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சித்தராமையாவிடமும் மனு கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவேன். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்