Published on 28/11/2019 | Edited on 28/11/2019
மஹாராஷ்ராவில் நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் நடந்த பதவி பங்கீட்டு பிரச்சனையால் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் நடந்த பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பின் இன்று சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் காட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கின்றன. 1995-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்று, சிவசேனாவின் மனோகர் ஜோஷி முதல்வராக பதவியேற்றார். 1999 வரை இந்த ஆட்சி நீடித்தது. அதன்பிறகு தற்போதுதான் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.