Skip to main content

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சரத் யாதவ் நீக்கம்!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சரத் யாதவ் நீக்கம்!

மாநிலங்களை உறுப்பினர் பதவியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் திடீரென கூட்டணி வைத்தார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முதல்வருமான நிதீஷ் குமார். இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சியிலிருந்து விலகியிருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டதாக மாநிலங்களவையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை சேர்மன் வெங்கைய்யா நாயுடு பதவி நீக்க உத்தரவில் கையெழுத்திட்டார்.

கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற சரத் யாதவ்விற்கு, 2022ஆம் ஆண்டு பதவிக்காலம் நிறைவடைகிறது. அலி அன்வர் அன்சாரிக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைய இருந்தது.

குஜராத்தில் பாஜக-விற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சரத் யாதவ், தற்போது வரை இந்த பதவி நீக்க நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

சார்ந்த செய்திகள்