நேபாளம் சிமிகோட் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அபாயங்களில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 1200 மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் இன்றி நடுவழியில் சிக்கி தவித்து வந்தனர்.
நேபாளத்தில் சிமிக்கோட் பகுதியில் 525 பேரும். ஹில்ஸா பகுதியில் 550 பேரும் மேலும் திபத்தை ஒட்டிய பகுதியில் 500க்கு மேற்பட்டோரும் சிக்கி தவித்து வந்தனர். இவர்களில் 23 பேர் தமிழர்கள் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக உடனடி துரித மீட்பு நவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நேபாள அரசிற்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சிமிக்கோட் பகுதியிலிருந்து 104 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு நேபாளின் கான்ஜ் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். ஆனால் தொடர்ந்து மீட்பு பணிக்கு வந்த ஐந்து சிறிய ஹெலிகாப்டர்களை இயக்கமுடியாத அளவிற்கு மோசமான சீதோஷண நிலை அங்கு நிலவிவந்ததை தொடர்ந்து தற்போது சிமிகோட் பகுதியில் இருந்து 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. அதில் தமிழர்கள் 18 பேர் மீட்கப்பட்டு லக்னோவிற்கு அழைத்துவரப்படுள்ளனர் எனவும் செய்திகள் வந்துள்ளன.