Skip to main content

விமானத்தில் இதுபோன்ற புகைப்படங்கள் எடுக்கத் தடை... டி.ஜி.சி.ஏ எச்சரிக்கை...!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

dgca bans photos inside flight

 

விமானத்துக்குள் இருந்து பயணிகள் விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது. 

 

கடந்த இரு நாட்களுக்கு முன் சண்டிகர்- மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணித்த போது, அவருடன் பயணித்தோர் பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கங்கானவை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாக இன்டிகோ நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விமானத்துக்குள் இருந்து விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "பயணிகள் விமானத்தில் யாரேனும் விதிமுறைகளை மீறி புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டறியப்பட்டால், அந்த விமானம் அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இருவாரங்கள் இயக்க தடை விதிக்கப்படும்.

 

விமான விதி 1937, விதி 13-ன் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்தப் பயணியும் விமானத்துக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது. விமானப் போக்குவரத்து அமைச்சகம், டி.ஜி.சி.ஏ அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல் கூடாது. இந்த விதிமுறைகள் ஏற்கனவே இருந்தபோதிலும், சில சமயங்களில், விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறிவிட்டன. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்