புதுச்சேரியில் பேச மறுத்த கல்லூரி மாணவி இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் சன்னியாசி குப்பத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகள் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்திருந்த நிலையில் நாகராஜனின் முதல் மனைவியின் தம்பி மகனான முகேஷ் என்ற இளைஞன் ராதாவிடம் பேச வந்துள்ளார். முகேஷ் ராதாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு வந்து பேச முற்பட்ட இளைஞன் முகேஷிடம் அந்த பெண் பேச மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் சம்பவம் இடத்திலேயே ராதா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில் கொலையில் ஈடுபட்ட முகேஷை திருபுவனை போலீசார் தேடி வருகின்றனர்.