Skip to main content

சீரம் நிறுவனத்தில் தீவிபத்து... 5 பேர் உயிரிழப்பு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Serum fire in pune

 

கரோனாவிற்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பூனேயில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் அலுவலகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில், இறந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தீ அணைக்கப்பட்ட போதிலும் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியில் ஆய்வுசெய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓட்டலில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறி தப்பித்த வாடிக்கையாளர்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் -  அருப்புக்கோட்டை பஜார் பகுதியில்,  இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது.  இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அங்கிருந்து தீ பரவி,  மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும்,  உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்  தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள்,  சேர்கள்  ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா?  இல்லை வேறு ஏதேனும் காரணமா?  என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Story

ம.பி. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Terrible fire accident in Madhya Pradesh Secretariat

மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று (09-03-24) இந்த தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் திடீரென தீ பற்றியது. இங்கு பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கி அந்த இடமே புகை மண்டலமானது.

இந்த தீ விபத்து தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.