தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவரா போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், சில வருடங்களுக்கு முன்பு நானும் பிரீத்தியும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்தோம். பின்பு ஒன்றாக தங்க விருப்பம் இல்லாததால், சில நாட்கள் கழித்து நான் தனியாக இருக்க விரும்பினேன். எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி தனியாக வீடு பார்த்து அங்கு தங்கினேன். இந்த நிலையில் சமீபத்தில் பிரீத்தி தனக்கு வீடு கிடைக்கவில்லை எனவும் அதனால் சிறுது நாட்கள் தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
நானும் அவளை என்னோடு தங்கி கொள்ள அனுமதித்தேன். நான் தற்போது இருக்கும் வீடு 2 படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் என்னோடு தங்கிக்கொள்ள அனுமதித்தேன். கொஞ்ச நாள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் வீட்டில் அவளோடு தங்கினார். தான் வீடு காலி செய்ய எனது அம்மா உதவிக்கு வந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் பிரீத்தி. ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் என்னுடைய வீட்டிலேயே தங்கி விட்டனர். சிறிது நாள் கழித்து ஊரில் இருந்து என்னுடைய அப்பா, அம்மா என்னை பார்ப்பதற்காக வருவதாக சொன்னார்கள். இதனையடுத்து ஊரில் இருந்து என்னை பார்க்க எனது பெற்றோர் வருவதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று பிரீத்தி மற்றும் அவரது அம்மாவிடம் கூறினேன். இதற்கு அவர்களும் சரி என்று சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நான் எனது நண்பருடன் ஜிம்மிற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்டேன். அப்போது பிரீத்தியிடம் அவளது அம்மா நான் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறினார். இதை நம்பிய பிரீத்தி என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தாள். பின்பு உடனே அவரது அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் என் முகத்தில் அடித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். கிட்டதட்ட என்னை அவர்கள் கொள்ள முயற்சி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பட ஆதாரங்களுடன் அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.