Skip to main content

ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தக்கதில் சாவர்க்கர்; பாஜக அரசு உத்தரவு!

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Savarkar's life is featured in a class 9 textbook in Uttar Pradesh

 

9 - 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 50 தலைவர்களைப் பற்றி அறியத் தனியாகப் பாடப்பிரிவை உத்திர பிரதேச அரசு சேர்த்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் படி 9 ஆம் வகுப்பு பாடத்தில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளனது. மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள படங்களில் அப்துல்கலாம், பழங்குடியின போராளி பிர்சா முண்ட உள்ளிட்ட தலைவர்கள், புரட்சியாளர்கள் என 50 பேரின் வாழ்க்கை வரலாற்றை அம்மாநில கல்வித்துறை சேர்த்துள்ளது. 

 

அதன்படி, சந்திர சேகர் ஆசாத், பிர்சா முண்டா, பேகம் ஹஸ்ரத் மஹால், கவுதம புத்தர், ஜோதிபா பூலே மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு 9 வகுப்பு படப்புத்தகத்திலும், ரோஷன் சிங், சுக்தேவ், லோகமான்ய திலக், கோபால கிருஷ்ண கோகலே, காந்தி, குதிராம் போஸ் உள்ளிட்டவர்களைப் பற்றி 10 ஆம் வகுப்பு படப்புத்தகத்திலும், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் உள்ளிட்டவர்களைப் பற்றி 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும், ரவீந்திரநாத் தாகூர், குருநானக் தேவ். சிவி ஆகியோர் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனது. நடப்பு கல்வியாண்டான 2023 - 2024 ல் இருந்து மாணவர்கள் தலைவர்களைப் பற்றிப் படிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் மாணவர்களைக் கண்டிப்பாகத் தலைவர்கள் பற்றிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், ஆனால் அந்த பாடப்பிரிவில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண், மதிப்பெண் பட்டியலில் இடம்பெறாது எனவும் அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்