Published on 19/05/2023 | Edited on 19/05/2023
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.30 தேதி வரை ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.