ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
1000 வருடங்களுக்கு முன்பு பிறந்து வாழ்ந்து மறைந்தவர் ராமானுஜர். அவருக்கு தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களைக் கொண்டு 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலை ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சர்தார் வல்லபாய் படேல் சிலை மிக உயர்ந்த சிலை என்ற நிலையில், அதற்கு அடுத்தகட்டமாகப் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்படும் இச்சிலையை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற இடத்தை பிடித்திருக்கிறது. தாமரை மலர் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள இச்சிலையின் பீடத்தில் 54 தாமரைகள், 36 யானை சிற்பங்கள் இடம்பெறுள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சிலையில் 120 கிலோ தங்கம் இடம்பெற்றுள்ளது. அல்லி இதழ்களில் 18 சாங்குகள், 18 சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காஞ்சிபுரத்தில் படித்து வளர்ந்தவர். ஸ்ரீரங்கத்தில் மறைந்தவர். அவராவது 1000வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்விற்காக ஹைதராபாத் வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி மஞ்சள் நிற அங்கவஸ்திரம் அணிந்து இருந்ததோடு, நெற்றியில் நாமம் சாத்தி இருந்தார். முச்சிந்தலா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.