காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசிய சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் தான்தரன் மாவட்டத்தில் அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் உள்ள சர்காலி பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது இரவுப் பகுதியில் ராக்கெட் வெடிகுண்டு வீசப்பட்டது. பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஏற்படுத்திய தாக்குதல் இது என்பது தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீசப்பட்ட ராக்கெட் குண்டுகள் காவல் நிலையத்தின் தூண்கள் மீது மோதி தடைபட்டதால் பெரிய சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் காவல்நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்தது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிற நிலையில் பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள், பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக முதற்கட்டமாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.