மேற்கு வங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தின் முதல்வரானார்.
இதனைத்தொடர்ந்து நான்கு பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் பாஜகவின் இணைந்தனர். மேலும் முன்னாள் மத்திய இணையமைச்சரும் பாஜக எம்பியுமான பாபுல் சுப்ரியோதிரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில் கடந்த வருடம் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சபயசாச்சி தத்தா மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இன்று இணைந்துள்ளார்.
சபயசாச்சி தத்தாவுக்கு மேற்குவங்க பாஜகவில் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்தாண்டு துர்கா பூஜைக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த அவர், இந்தாண்டு துர்கா பூஜைக்கு முன்னர் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.