இந்திய ராணுவத்தின் எட்டு முன்னாள் மூத்த அதிகாரிகள் உட்பட 150 க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கூட்டாக இணைந்து, மக்களவைத் தேர்தலில் இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர்கள் இந்தியா ராணுவத்தை தவறான முறையில் உபயோகிக்கின்றனர். இந்திய ராணுவம் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கான பாராட்டுகளையும் பெயரையும் அரசியலுக்காக உபயோகிக்கின்றனர். மேலும் ராணுவத்தை "மோடியின் படை" என்றும் பாஜக தலைவர் குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு விஷயம். எல்லை பணியில் உள்ள வீரர்களுக்கு இவர்களின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தையும், அவர்களின் போர் திறனை சந்தேகிக்கும் வகையிலும் அவர்களை புண்படுத்தும். எனவே இத்தகைய செயல்களில் இனி பாஜக ஈடுபடக்கூடாது என வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.