நாளை இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் போல்சனரோ நாளைய குடியரசுதின விழாவில் சிறப்பு பார்வையாளராக கலந்துகொள்ள உள்ளார். இதனையடுத்து டெல்லி நகர் முழுவதும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் முக அங்கீகார முறை மற்றும் ட்ரோன்கள் என நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாளை அணிவகுப்பு நடக்கும் 8 கி.மீ நீளமுள்ள பாதை முழுவதும் ஆங்காங்கே துப்பாக்கியுடன் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 10.35 மணி முதல் மதியம் 12.15 மணி வரை டெல்லியில் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியை சுற்றி சுமார் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் ரோந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.